பலே.. இப்போ பாடலும் எழுத ஆரம்பித்துவிட்டார் ஆண்ட்ரியா..!

andrea

தன்னை ஒரு நடிகையாக அடையாளப்படுத்தி கொள்வதை விட, ஒரு பாடகியாகவே எப்போதும் முன்னிறுத்துவார் ஆண்ட்ரியா. அதனாலேயே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியாக வலம்வரும் ஆண்ட்ரியாவின் ஹானஸ்ட்லி என்கிற ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.

ஆங்கில மொழியில் உள்ள இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்தும் உள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கிடாரிஸ்ட் கெபா ஜெரிமியா ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது. தற்போது இந்த பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.