ஆண்ட்ரியாவை பொறுத்தவரை பாடல், நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.. அந்தவகையில் நட்புக்காக பாட அழைக்கும் இசையமைப்பாளர், இயக்குனர், நடிக நண்பர்களுக்காக பாடிகொடுக்க அவர் தயங்குவதே இல்லை. அப்படி பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியும் இருக்கின்றன.
அந்தவகையில் அரவிந்த்சாமி அமலாபால் நடிக்க சித்திக் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்காக அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியுள்ளார். ..இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30 ம் தேதி வெளியிடுகிறது. சூப்பர் ஹிட் பாடலாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் உருவாகி உள்ளதாக அம்ரீஷ் கூறியுள்ளார்.