“வெற்றிமாறன் வித்தியாசப்படுவது இதில் தான்” ; ஆண்ட்ரியா புகழாரம்..!

andrea 1

முற்றிலும் நம்பமுடியாத கெட்டப்பில் காட்சியளிக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. இது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கும் வடசென்னை படத்திற்கான தோற்றம் தான். ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் என இன்னும் சில முக்கிய நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்தப்படத்திற்கு தன்னை வெற்றிமாறன் தேர்வு செய்தது குறித்து சிலாகித்து கூறியுள்ளார் ஆண்ட்ரியா.

“நான் பார்த்தவரையில் பல இயக்குனர்கள், நடிகைகளின் அழகு மற்றும் தேதிகள் ஒத்துவருகின்றதா என பார்த்துதான் பட வாய்ப்பு வழங்குவார்கள். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இங்கேதான் வித்தியாசப்படுகிறார். தான், கதையில் வடித்த கேரக்டரை இவரால் வெளியே கொண்டுவர முடியும் என யாரை நினைக்கிறாரோ, அவர்களையே தனது படத்திற்கு தேர்ந்தெடுக்கிறார். அப்படி செலக்ட் செய்தவர்களை அந்த கேரக்டர்களாகவே மாற்றுகிறார்” என புகழாரம் சூட்டுகிறார் ஆண்ட்ரியா.