மும்மொழி படத்தில் சித்தார்த்துடன் இணைந்த ஆண்ட்ரியா..!

Siddharth - andrea

‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார் சித்தார்த். குறிப்பாக சித்தார்த் நடிக்கும் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்கிற படம் தமிழ், தெலுங்கு இந்தி என மும்மொழிகளில் தயாராக இருக்கிறது.. இந்தப்படத்தில் சித்தார்த்தின் ஜோடியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா.

சித்தார்த்தின் ‘ஜில் ஜங் ஜக்’கில் ஒரு பாடல் பாடிய ஆண்ட்ரியா, இப்போது சித்தார்த்துக்கே ஜோடியாக மாறியிருப்பது ஆச்சர்யம் தான்.
இந்தப்படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்குகிறார்.. இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர்.. இதற்குமுன் ஆர்யாவின் தம்பி தம்பி சத்யா மற்றும் குத்து ரம்யா இருவரையும் வைத்து இவர் எடுத்த ‘காதல் 2 கல்யாணம்’ படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..