காட்டுக்குள் சாகசப்பயணம் மேற்கொள்ளும் ஆண்ட்ரியா..!

kaa

கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. உலக மக்களுக்கான படமாம் இது.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். தற்போது இவர்கள் ‘பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.

இயக்குனர் நாஞ்சில் டைரக்சனில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது