தான் நடித்த படத்தை பார்க்க பயப்படும் ஆண்ட்ரியா..!

andrea

ஜில் ஜங் ஜக் படத்தையடுத்து சித்தார்த் தயாரித்து நடித்துள்ள படம் தான் ‘அவள்’. டைட்டிலை பார்த்ததும் இது எதோ குடும்ப படமாக இருக்கும் என நினைத்துவிடவேண்டாம்.. அக்மார்க் திகில் பேய் படம் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னத்தின் சீடரான மிலின்ட் ராவ் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சித்தார்த், “ஹாலிவுட் பேய் படங்களை பார்த்தவர்கள் இதுபோல் தமிழில் எடுக்க மாட்டேன்கிறார்களே என்கின்றனர். அந்த குறையை இப்படம் போக்கும். படம் பார்ப்பவர்கள் கண்டிப்பாக பயப்படுவார்கள். இப்படியொரு பெரிய படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு, இப்போது நனவாகி இருக்கிறது.. இந்தப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளது படத்தின் மிகப்பெரிய பலம்” என்றார்.

ஆண்ட்ரியா பேசும்போது, “எனக்கு பேய் படம் என்றால் பயம். இந்த பேய் படத்தில் நான் நடித்திருந்தாலும் அதை நான் பார்க்க மாட்டேன்’ என்றார். ஆண்ட்ரியா இப்படி சொன்னதும், ‘நாங்கள் கூட இருக்கிறோம். எங்களுடன் பாருங்கள்’ என்று சித்தார்த் அவருக்கு தைரியம் அளித்தாலும் கூட, “இல்லப்பா.. நான் பாக்கமாட்டேன்” என்றார் திகில் விலகாமல்.

இந்தப்படத்தில் அதுல் குல்கர்னி மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட பனிரண்டு வருடங்களுக்கு முன் சித்தார்த்தும் அதுல் குல்கர்னியும் இணைந்து ஒரு இந்திப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.