அமிதாப்பை தமிழுக்கு அழைத்துவந்த எஸ்.ஜே.சூர்யா..!

amithab-sj surya film

இந்திய சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன்.. தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இவர் தெரிந்த முகம் என்றாலும் இத்தனை வருடங்களில் ஒரு தமிழ்ப்படத்தில் கூட இவர் நடித்ததில்லை.. சொல்லப்போனால் சூப்பர்ஸ்டார் ரஜினி கூட இவரை தமிழுக்கு அழைத்தது பார்த்தும் பிடிகொடுக்கவில்லை.

ஆனால் இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யாவும் அவரது சிஷ்யரான தமிழ்வாணனும் சேர்ந்து அமிதாப்பை முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்து மிகப்பெரிய சென்சேஷனல் நியூஸ் ஆக்கிவிட்டார்கள். ஆம்.. அமிதாப்பும் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்கிற படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தை இயக்கும் தமிழ்வாணன் முதன்முதலாக எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி படம் மூலம் அறிமுகமானவர். இவர் சொன்ன ஸ்க்ரிப்ட்டை கேட்ட்டதும் மறுபேச்சு பேசாமல் அமிதாப் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய ஆச்சர்யம்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர்ஸ்டார் ரஜினி தன் கையால் வெளியிட்டுள்ளது, படக்குழுவினரை இன்னும் குஷிப்படுத்தியுள்ளது.