“தமிழ் சினிமாவின் ஆயுதம் தனுஷ்” ; அமீர் புகழாரம்

vadachennai (1)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோருடன் இயக்குனர் அமீர் முக்கியா வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம்போல கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், சென்ராயன் என பொல்லாத(வன்) கூட்டணியும் இந்தப்படத்தில் உண்டு.. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள வரும் இந்தப்படம் அக்-17ஆம் தேதி வெளியாக இருப்பதை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியபோது, “வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும்.” என்றார்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, “படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார்” என்றார்.

.ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இந்த மேடையை பார்க்கும்போது காக்கா முட்டை படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ்” என்றார்.

நடிகர் மற்றும் இயக்குனரான அமீர் பேசியபோது, “இத்தனை வருடங்களில் தனுசின் வளர்ச்சியும் அவரது நடிப்பும் அடைந்துவரும் மாற்றத்தை கண்கூடாக பார்த்து வருகிறேன். தனுஷை தமிழ்சினிமாவின் ஆயுதம் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்தப்படத்தை ஒரு ரசிகனாக பார்த்தபோது தனுஷ் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார். தரமணியில் பார்த்த ஆண்ட்ரியா அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.