“அமீருக்குள் இப்படி ஒரு சோகமா..?” ; பாடம் விழாவில் வெளிப்பட்ட சுவாரஸ்யம்..!

paadam ameer seeman

இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘பாடம்’. குறிப்பாக இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் நாகேந்திரன், ஆர்.என்.ஆர். மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ .S.S படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார் இந்த படத்தை ஜிபின் என்பவர் தயாரித்துள்ளார். இந்த பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினர்களாக இயக்குனர் சீமான், அமீர், பாலாஜி மோகன், சீனுராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் அமீர், “உலகில் வேறு எங்கு செல்லவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டிய சூழ்நிலை ஆகவே தமிழ் மொழியை மூச்சாக வைப்போம் ஆகிலத்தை தேவைக்கு பயன்படுத்துவோம்” என்று கூறினார்.

மேலும் ஆங்கிலம் தெரியாததால் தான் இயக்கிய ராம்’ படத்தில் நடித்த நாயகி கஜாலாவுடன் தன்னால் ஆங்கிலத்தில் பேசிப்பழக முடியவில்லை என்றும், அதனால் தான் ‘பருத்திவீரன்’ படத்தில் தமிழ்பேச தெரிந்த பிரியாமணியை ஒப்பந்தம் செய்ததாகவும் தனக்கு ஏற்பட்ட சங்கடம் பற்றி ஜாலியாக பேசினார்.