அமலாபால் திடீர்னு சொன்னா அவங்க என்ன பண்ணுவாங்க..?

அமலாபால் என்ன சொன்னார்..? யார் என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல்ல.. சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா.. அதாவது அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலிச்சுட்டு இருந்த விஷயம் அரசல் புரசலா இருந்துச்சுதான்..

ஆனா அதப்பத்தி கவலைப்படாம அமலாபாலுக்கு படம் புக் ஆகிட்டுதான் இருந்துச்சு. ‘வஸ்தா நீ வேணுகா’ங்கிறதும் அப்படி தெலுங்குல புக்கான ஒரு படம் தான். ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கலை. ஆனா இப்ப அமலாபால், விஜய் திருமணம் முடிவானதால அமலாபாலுக்கு பதிலா வேற ஹீரோயின் தேடுறாங்க..

ஏன்.. அமலாபால் திருமணத்துக்கு அப்புறமா படங்கள்ல நடிக்கமாட்டேன்னு சொல்லலையே.. நடிக்கக்கூடாதுன்னும் விஜய் சொல்லலியே.. பிரச்சனை அது இல்லைங்க.. இந்தப்படம் லவ் ரொமாண்டிக் படம். இதுல வர்ற ஹீரோயின் காதல் ரசம் சொட்டச்சொட்ட நடிக்கணும்..

ஆனா திருமணத்துக்கு பின்னாடி அமலாபால் நடிச்சா அந்த கேரக்டருக்கான கிரேஸ் குறைஞ்சுருமாம். அதுக்காகத்தான் ஃப்ரெஸ்ஷா ஒரு பொண்ணை தேடுறாங்களாம். அமலாபால் இப்படி திடீர்னு கல்யாணம்னு சொன்னா பாவம் அவங்கதான் என்ன பண்ணுவாங்க..?