உயிரோடு விட்டதற்கு நன்றி சொன்ன அமலாபால்..!

vip 2 amalapaul

தனுஷின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் ‘வேலையில்லா பட்டதாரி’.. சுருக்கமாக ‘வி.ஐ.பி’.. தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘வி.ஐ.பி-2’ வெளியாகி இருக்கிறது.. முதல் பாகத்தில் நடித்த அதே காதாபாத்திரங்கள் பலரும் இதிலும் இடம்பெற்றுள்ளனர்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதனால் இந்தப்படத்தின் இசைவெளியீடு விழாவை சமீபத்தில் மும்பையில் நடத்தினார்கள்.. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது பெரும்பாலும் முதல் பட நாயகியை மாற்றிவிடுவார்கள்.. சிங்கம் போல ஒரு சில படங்கள் விதிவிலக்கு.. இந்த விஷயத்தை பற்றி அந்த விழா மேடையில் கலகலப்பாக பேசினார் நாயகி அமலாபால்..

அப்போது தனுஷுக்கு நன்றி சொன்னார் அமலாபால்.. ஏன் தெரியுமா..? “வி.ஐ.பி. படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்காக மட்டும் என் நன்றியைச் சொல்லவில்லை. வி.ஐ.பி. இரண்டாம் பாகத்தில் வேறு ஹீரோயினை நடிக்க வைப்பதற்காக என்னைக் கொலை பண்ணாமல் விட்டதற்காகத்தான் நன்றி சொல்கிறேன்” என்றார் அமலாபால்..

அதற்கு தனுஷ், “மூணாம் பாகம் இருக்குல்ல..” என ஒரு பிட்டை தூக்கிப்போட ஜாலியாக ஷாக்கானர் அமலாபால்.