இரண்டு வருடங்களே ஆன நிலையில் இது நடந்திருக்க வேண்டாமே..!

amala-paul-vijay

ஒவ்வொரு முறையும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இருவர் காதலித்து திருமணம் செய்துகொள்ளும்போதெல்லாம் இவர்கள் திருமண வாழ்க்கை ஆயுள் வரை நல்லபடியாக நீளுமா என்கிற சந்தேகமும் கூடவே எழாமல் இல்லை.. காரணம் இதுநாள் வரை திரையுலகில் நாம் பார்த்து வந்த பிரபலங்களின் திருமண முறிவுகள் தான்.

குறுகிய காலத்திலேயே புகழ்பெற்ற நடிகை அமலாபாலை, அவரை வைத்து தான் முதலில் இயக்கிய ‘தெய்வத்திருமகள் படத்தில் காதலிக்க ஆரம்பித்தார் விஜய்.. தலைவா’ படத்தில் அந்த காதல் தீவிரமானது. பின்னர் அந்த காதல் வெளியுலகிற்கு தெரியவர, உடனே இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்..

வழக்கமாக ஒரு இயக்குனரும் நடிகையும் காதலித்து திருமணம் செய்யும்போது ஏற்படும் எகோ பிரச்சனை இவர்களுக்குள்ளும் தலைதூக்கியது விதியின் விளையாட்டு தான். விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் திரைப்படங்களில் நடிக்க அமலாபால் காட்டிய தீவிரம் இப்போது இரண்டே வருடத்தில் அவர்கள் மணமுறிவு வரை கொண்டு வந்து விட்டுள்ளது.