அமலாபாலின் தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இரண்டு ‘அடடே’ அம்சங்கள்..!

amala-paul-brother

நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால் ஏற்கனவே சில மலையாளப்படங்களில் நடித்துள்ளார். அவரது அறிமுகமே மோகன்லால் அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் மூலம் அமைந்தது.. அதைத்தொடர்ந்து பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அபிஜித் பால்.

இப்போது அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கவுள்ளார்.. இவர்தான் தற்போது சாருஹாசனை வில்லனாக வைத்து ஒரு படத்தையும் இயக்கி வருகிறார்.. அபிஜித் நடிக்கும் புதிய படத்தில் இடவேலையே கிடையாதாம்.. சரிதான் பாடல் காட்சிகளிலாவது வெளியே எழுந்து செல்ல வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் பாடல்களும் கிடையாதாம்.