‘அதோ அந்த பறவை போல’ வாழ தயாராகும் அமலாபால்..!

எம்.ஜி.ஆர் பாடல்களில் மக்களை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்றுதான் ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்கிற பாடல். தற்போது அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்திற்கு ‘அதோ அந்த பறவை போல’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கே.ஆர்.வினோத் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை அமலாபாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.