“பிறந்து வளர்ந்த ஊரில் ஜெயிப்பதில் தானே கிக் இருக்கு” ; தமிழுக்கு வந்தார் அல்லு அர்ஜுன்..!

allu-arjun-in-tamil-2

தெலுங்குப்படங்களை விரும்பிப்பார்க்கும் ரசிகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? மகேஷ்பாபு, பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் என இளம் முன்னணி ஹீரோக்கள் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் ஆகி சக்கை போடு போடுகின்றன. ஆனால் மலையாளத்தில் படம் தவறாது டப்பிங் ஆகும் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிங் ஸ்டார் அல்லு அர்ஜுன் படங்கள் மட்டும் தமிழில் டப்பிங் ஆவதில்லை தெரியுமா..?

அதற்கு காரணம் உண்டு.. ஏனென்றால் அல்லு அர்ஜுன் டப்பிங் படங்கள் மூலமாக அல்லாது நேரடி தமிழ்ப்படம் மூலமாகவே தமிழில் அறிமுகமாக விரும்பினார்.. அந்தவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழில் அறிமுகமாவதற்காக நல்ல கதையை தேடிக்கொண்டு இருந்தார் அல்லு அர்ஜுன்..

பலரும் நல்ல கதைகளை சொன்னார்கள் தான்.. ஆனால் தமிழுக்கு மட்டுமே செட்டாகும் கதைகளாக அவை இருந்தன.. அப்போதுதான் லிங்குசாமி சொன்ன கதை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் செட்டாகும் என அல்லு அர்ஜுனுக்கு தோன்ற உடனே அவரது டைரக்சனில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.. இந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜுன், “நான் பிறந்து வளர்ந்து, படித்து என 20 வருடங்கள் இருந்தது தமிழ்நாட்டில் தான்.. என்னதான் ஆந்திராவில் வெற்றிகளை பெற்றாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் ஜெயிக்கிறோம் என்றால் அதுதானே கிக்.. தமிழில் அப்படி அறிமுகத்தையும் வெற்றியையும் எதிர்பார்த்தே வந்துள்ளேன்” என கூறினார்.

ரொம்பவே அழகாக தெளிவாக தமிழ் பேசுகிறார் அல்லு அர்ஜுன்.. ஹேட்ஸ் ஆப் சார்..