அஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..?

சினிமாவில் நடிப்பது மட்டுமே தன வேலை என இருந்து வரும் அஜித் பொதுவெளியில் எங்கேயும் தனது கருத்துக்களை சொன்னதில்லை.. இதனாலேயே பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் அஜித். சமீபத்தில் அவரது கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் கட்டவுட் சரிந்து காயமானது குறித்து கூட அவர் வாய் திறக்கவில்லை.

தற்போது பாரதீய ஜனதா கட்சியில் அஜீத் ரசிகர்கள் இணைந்ததாக செய்திகள் வெளியான.. இந்த நிலையில், தனக்கு அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை தான் விரும்பவில்லையென்றும் அஜீத் விளக்கமளித்துள்ளார். தனிப்பட்ட முறையிலோ, நான் சார்ந்துள்ள திரைப்படங்களிலோ அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் தான் என கூறியுள்ளார் அஜித்.

சில வருடங்களுக்கு முன்பாக என் ரசிகர் மன்றங்களைக் கலைத்ததும் இந்தப் பின்னணியில்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகும் சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ தொடர்புபடுத்தி சில செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லை என்பதைத்தான். என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது.