அஜித்தின் வெற்றியால் சிம்புவுக்கு பிறந்தது விடிவுகாலம்..!

2௦13லேயே சிம்புவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த  கௌதம் மேனன், விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வந்தார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த அந்த நேரத்தில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படம் கமிட்டாகவே சிம்பு படத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தார். இப்போது என்னை அறிந்தால் ரிலீசாகிவிட்டது ஒருபுறமும், படம் ஹிட்டாகி விட்டது இன்னொரு பக்கமும் என குதூகலத்துடன் இருக்கும் கௌதம் மீண்டும் சிம்புவின் படத்தை கையில் எடுத்திருக்கிறார்.

அடுத்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் என்ற வட இந்திய மாடல் கம் நடிகையை அறிமுகப்படுத்துகிறார் கௌதம். படத்திற்கு இசையமைப்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப்பின் இவர்கள் இந்தப்படத்தின் பாடல்களிலும் மாயாஜாலம் காட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.