இத்தாலியில் அஜித் நடத்திய போட்டோஷூட்..!

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்தமுறை சிவா டைரக்சனில் ‘வீரம்’ படத்தில் நடித்தபோது அவ்வப்போது பைக் ஒட்டி படக்குழுவினரையும் ரசிகர்களையும் அசத்தினார். இந்தமுறை அவர் கையில் எடுத்திருப்பது போட்டோகிராபி..

இங்கே சில நாட்களுக்கு முன் அப்புக்குட்டியை.. ஸாரி.. சிவபாலனை வரவழைத்து போடோஷூட் நடத்தி ஆளையே மாற்றிக்காட்டினார் அல்லவா..? அதேபோல இத்தாலியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின்போது ஒய்வு நேரத்தில் படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசனை விதவிதமான தோற்றங்களில் படங்களாக சுட்டுத்தள்ளியுள்ளார். ஸ்ருதிஹாசன் அழகா, அஜித் புகைப்படம் எடுக்கும் ஸ்டைல் அழகா என சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களிடம் பட்டிமன்றம் நடக்காத குறைதான் போங்கள்.