லட்சுமி மேனன் கல்லூரியில் சேர்ந்தார் : உறுதி செய்த அஜித்..!

‘பாசமலர்’ படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடிக்கவேண்டும் என நடிகையர் திலகம் சாவித்திரியிடம் சொன்னபோது, ஹீரோவுக்கு தங்கை ரோலா என சற்றும் யோசிக்காமல் கதைமீது நம்பிக்கை வைத்து ஒகே சொன்னாராம். இப்போது லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக நடித்து வருவதும் அப்படி எடுத்த ஒரு துணிச்சலான முடிவுதான்.

வீரம் படத்தை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘அஜித்-56’ படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் கொல்கத்தாவில் டாக்சி ஓட்டுபவராக அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது

லட்சுமி மேனனை அழைத்துக்கொண்டு பெட்டி, படுக்கையை தூக்கிக்கொண்டு அவரை கல்லூரியில் சேர்ப்பதற்காக அஜித் அவரை அழைத்துச்செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டையை கிளப்புகிறது. மற்றபடி தற்போதுதான் பிளஸ்-டூ படிப்பை முடித்திருக்கும் லட்சுமி மேனன், உண்மையிலேயே காலேஜில் சேர்ந்துவிட்டாரோ என குழம்பிக்கொள்ளவேண்டாம்.