அஜித் பட கலெக்சன் நூறு கோடியா..? இல்ல.. அதுக்கும் மேல..!


ஒப்பனிங் மட்டுமல்ல பினிஷிங்கையும் நன்றாகவே செய்துகொடுத்திருக்கிறது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’. தங்கள் மீது ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை துளியும் வீணாக்காமல் ஒரு கமர்ஷியல் ஹிட்டை கொடுத்து கலெக்சனிலும் பிரமாதபடுத்தியுள்ளது அஜித்-கௌதம் மேனன் கூட்டணி.

கடந்த 21 நாட்களில் மட்டும் நூறு…. இல்லையில்லை 1௦2 கோடி ரூபாய் வசூலித்து 1௦௦ கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளது ‘என்னை அறிந்தால்’. இதில் இந்தியாவில் 73.5 கோடியும் வெளிநாடுகளில் 28.5 கோடியும் வசூலாகியிருக்கின்றதாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 61 கோடியை அள்ளியிருக்கிறது இந்தப்படம். கர்நாடகாவில் 6.3 கோடி மற்றும் கேரளாவில் 5.3 கோடி வசூல் என்பது இதர மாநில கலெக்சன் நிலவரங்கள்.