அஜித் பிறந்தநாளை டார்கெட் பண்ணும் தமிழ் சினிமா..!

சாதரணமாக படங்களை வாராவாரம் வெள்ளிக்கிழமை திரையிடுவது ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் முக்கியமான பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் ரிலீசாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் பண்டிகை தினமாக இல்லாத மே-1ஆம் தேதி, அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் சினிமா ஏரியாவில் பண்டிகை நாளாகவே மாறிவிட்டது என்று சொல்லாம்.

கூடுதலாக மே-1ஆம் தேதி வெள்ளிக்கிழமையாகவும் அமைந்துவிட்டது. அஜித்தின் பிறந்தநாளில் தங்களது படம் வெளியாவதை பெருமையாக நினைக்கும் பல இளம் ஹீரோக்களில் அஜித்தின் முதன்மை ரசிகராக அறியப்படும் சிம்பு, தனது ‘வாலு’ படத்தை அஜித் பிறந்த நாளில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்.

அவரை தொடர்ந்து அருண்விஜய்யும் தான் நடித்துள்ள ‘வா டீல்’ படத்தை மே-1ல் வெளியிட்டு தனது ‘என்னை அறிந்தால்’ நன்றிக்கடனை அஜித்துக்கு செலுத்த முடிவு செய்துள்ளார். இந்த கோணத்திற்குள் சேராமல் கமலின் ‘உத்தம வில்லன்’ படமும் மே-1ஆம் தேதி வெளியாவதாக அதிராப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.