சிக்ஸ்பேக் சங்கத்தில் இப்போது அருண்விஜய்..!


நானும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோதான் என நிரூபிக்க நம் கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் ‘சிக்ஸ்பேக்’. இதன்மூலம் கட்டுமஸ்தான தங்களது உடலைக் காட்டும்போது படம் பார்க்கும் ரசிகனுக்கு அவரது திறமையில் எந்தவித சந்தேகமும் வராது அல்லவா? அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஷால், லேட்டஸ்ட்டாக பரத் உட்பட பலரும் ஒருமுறை தங்களது படங்களில் சிக்ஸ்பேக் காட்டிவிட்டார்கள்.

ஹீரோக்கள் தான் சிக்ஸ்பேக் காட்டவேண்டுமா, வில்லனாக நடித்தால் காட்டக்கூடாதா என்ன? எஸ். இப்போது அருண்விஜய்யும் சிக்ஸ்பேக்கிற்கு மாறியுள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் முக்கிய வேடத்தில் (வில்லனாக) நடிக்கும் அருண்விஜய் க்ளைமாக்ஸில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்காக தனது உடலை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றியுள்ளார். நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என அருண்விஜய்யின் சிக்ஸ்பேக்கிற்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளாராம் அஜித்.