காமெடி நடிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!

நீதானே என் போன் வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தா ஜோடியை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது சந்தானம்-வித்யுலேகா ராமன் ஜோடி தான். காமெடியில் அசால்ட் பண்ணும் வித்யுலேகா கடந்த வருடம் அஜித்துடன் ‘வீரம்’, விஜய்யுடன் ‘ஜில்லா’ மற்றும் சமீபத்தில் வெளியான காக்கி சட்டை’ உட்பட பல படங்களில் நடித்தார்.

வீரம் படத்தில் நடித்தபோது அஜித்துடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அஜித் நடித்த என்னை அறிந்தால்’ படம் ரிலீஸானபோது அஜித்துக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார் வித்யுலேகா. ஆனால் அஜித் அதற்கு தாமதமாகத்தான் பதில் அனுப்பியிருந்தார். ஆனால் சொல்லவந்த விஷயம் அதைப்பற்றியல்ல..

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “காலைப் பொழுது ‘தல’ எஸ்.எம்.ஸுடன் விடிந்தது. நான் அனுப்பிய வாழ்த்திற்கு பதில் அனுப்பியதோடு தாமதமாக பதில் அனுப்பியதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார் அஜித். இன்றைக்கு சினிமாவில் உலாவரும் சில ‘ஷோ கால்டு’ நடிகர்கள் அவரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.. யாருடனும் எந்த வித ஈகோவும் இல்லாமல் நட்பு பாராட்டுவதால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார்” என ‘தல’ புராணம் பாடியிருக்கிறார் வித்யுலேகா ராமன்.