மஹா சிவராத்திரியில் போடப்பட்ட அஜித்-சிவா கூட்டணி ஒப்பந்தம்..!

ajith-siva

அஜித்துக்கு ஒரு இயக்குநரை பிடித்துவிட்டால் அடுத்தடுத்து அவரது படங்களில் தொடர்ந்து நடிக்கவும் தயங்கமாட்டார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.. ஆம்.. வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்திலேயே அஜித் மீண்டும் நடிக்கவிருக்கிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன.

அஜித்தின் 57வது படமான இந்தப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்போது அதை நூறு சதவீதம் உறுதிப்படுத்தும் விதமாக மகாசிவராத்தி தினத்தன்று இந்தப்படத்தின் இயக்குனராக அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார் இயக்குனர் சிவா. படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள், டெக்னீசியன்கள் தேர்வை ஆரம்பித்துள்ளாராம் சிவா.