அஜித்துடன் 7.. கௌதம் மேனனுடன் 13.. விவேக்கின் வனவாச கணக்கு…!

விவேக்கின் அடுத்த இன்னிங்ஸ் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. ‘நான் தான் பாலா’ படத்தில் சீரியஸான ரோலில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் விவேக்கிற்கு  இடையில் ஒரு இடைவெளி விழுந்தது என்னவோ உண்மைதான். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் இல்லை (சிங்கம்-2 தவிர).

ஆனால் இப்போது ஃபீனிக்ஸ் பறவையாக தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துவிட்டார் விவேக். ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் விவேக்கிற்கு, தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்துள்ளது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’வில் காமெடி ஏரியாவில் கலக்கிய விவேக் 13 வருடம் வனவாசம் கழிந்தமாதிரி தற்போது அவருடன் இணைந்துள்ளது காலம் நிகழ்த்தி காட்டிய அதிசயம். அதேபோல 2007ல் ‘கிரீடம்’ படத்தில் அஜித்துடன் நடித்த விவேக் 7 வருடம் கழித்து மீண்டும் இப்போது தான் அவருடன் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, விவேக்கின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது.. அப்படியே கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துவிட்டால் ஒரு சாதனையை படைத்த மாதிரியும் ஆயிற்று.. இதுவரை கமலுடன் நடிக்காமல் இருக்கும் சாபத்தையும் உடைத்த மாதிரி ஆயிற்று.. நடக்குமா..? எதிர்பார்க்கலாமா..?