அஜித்தின் 56வது படம் பூஜையுடன் துவங்கியது..!

அஜித் ரசிகர்களின் கொண்ட்டாட்டத்திற்கான நாள் தான் இன்று. பின்னே அஜித்தின் 56வது படத்தின் பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளதே.. ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் அற்புதமான வாய்ப்பு ஏ.எம்.ரத்னத்திற்கே சென்றுள்ளது. படத்தை இயக்குவது சிறுத்தை சிவா.

ஏ.எம்.ரத்னம், சிறுத்தை சிவா என தனக்கு பிடித்தமான அதே கூட்டணியுடன் தான் அஜித் இந்தமுறையும் கைகோர்த்துள்ளார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் துவங்க உள்ளது. கிராமத்து பின்னணியில் ‘வீரம்’ காட்டியவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்களோ.. பொறுத்திருப்போமே கொஞ்ச நாட்கள்..