அஜித்-55வது படத்தின் டைட்டில் ‘ஆயிரம் தோட்டாக்கள்’..?


‘ஆரம்பம்’, வீரம்’ என இரண்டு படங்களின் டைட்டில்களும் பல நாள் இழுபறிக்குப்பின் தான் வெளியாகின. காரணம் டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருவது கூட ஒருவிதமான பப்ளிசிட்டி தான். இதில் அஜித்தை நாம் குறை சொல்லமுடியாது.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்துக்கு, ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இருந்தாலும் இதற்கான இறுதியான முறையான அறிவிப்பு வரும் ஆகஸ்ட்-29ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.