ஏப்-15ல் ஐஸ்வர்யா ராஜேஷின் படம் ரிலீஸ்..!

aiswarya rajesh

தமிழில் ஒரு ஸ்திரமான இடத்தை பிடித்துவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி, மலையாளம் என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தி வருகிறார்.. மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ படத்தில் அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது.. அவரது நடிப்பும் நன்றாக பேசப்பட்டது.

அந்தவகையில் மலையாளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படமாக ‘சகாவு’ தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் நிவின்பாலி ஹீரோவாக நடித்துள்ளார்.. ஆச்சர்யமாக இந்தப்படத்தில் ஜானகி என்கிற கேரக்டரில் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடித்துள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதில் ஒன்று 65 வயது பெண்மணி வேடமாம். வரும் ஏப்-15ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.. இந்தப்படமும் தனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் என திடமாக நம்புகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.