முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

aiswarya rajesh

இயக்குனர் மணிரத்னம் படங்களில் கதாநாயகியாக நடிக்கவேண்டுமென்றால் அவர் முன்னணி கதாநாயகியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை..நடிக்க தெரிந்த நடிகையாக இருந்தால் அவருக்கு நிச்சயம் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை..

அதுமட்டுமல்ல வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.