மீண்டும் ஒரு வீராங்கனையாக மாற தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை படத்திற்கு பிறகு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்கள் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ஐஸ்வர்யா ராஜேசை தேடி வருகின்றன. சமீபத்தில் வெளியான கனா படத்திற்கு பிறகு அவரை தேடி மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதைகள் வர ஆரம்பித்துள்ளன.

கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, அடுத்ததாக தெலுங்கில் நடிக்கவுள்ள புதிய படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம்..

மலையாளத்தில் வெளியான ‘கோதா’ என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறது. தனது காதலனின் கிராமத்தினரின் கனவை நனவாக்க மல்யுத்த வீராங்கனையாக களமிறங்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதற்காக மல்யுத்த பயிற்சியும் எடுத்து வருகிறாராம்.