பிணத்தின் மீது ஏறி சாவுக்குத்து ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

hnpp
இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள படம் தான் ‘ஹலோ நான் பேய்பேசுறேன்’. வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ‘தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை’ என்று குமுறினார்.

“எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேசி நடிக்கும் நடிகை என்பதால் என்னை தேர்வு செய்ததாகக் கூறினார்.. தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. அந்தவகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப் படுகிறேன். இதில் நான் விடிவி கணேஷின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.

நான் இதுவரை சரியானபடி நடனம் ஆடி நடித்ததில்லை இதில் சிரமப்பட்டு ஆடியிருக்கிறேன். ‘சில்லாக்கி டும்மா’ பாடலில் பிணத்தின் மீது எல்லாம் ஏறி நடனம் ஆடியிருக்கிறேன். இதில் நாங்கள் ஆடும் சாவுக்குத்து பக்கா லோக்கலாக இருக்கும். இது ஒரு நல்ல அனுபவம்” என்றார்.