இதயம் முரளிக்காக இடம் தேடி அலையும் அஹமது..!

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடித்த “என்றென்றும் புன்னகை” படத்தின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குனர் அஹமத், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் ‘இதயம் முரளி’  என்னும் படத்தை தற்போது இயக்கவுள்ளார் அஹமத்.

இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் மதி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதன் முதல் கட்ட வேலையாக நியூயார்க்கில் படப்பிடிப்பு நடத்த தகுதியான இடங்களை தேர்ந்தெடுக்கும் வேளைகளில் மும்முரமாய் இறங்கியுள்ளார் இயக்குனர் அஹமது.

முக்கியமான இன்னொரு விஷயம் என்னவென்றால் ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று ‘சிருனவ்வுல சிருஜலு’ என்கிற பெயரில் வெள்ளியன்று வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.