ரஜினி ரசிகர் தயாரிப்பில் உருவான ‘அகவன்’..!

Aghavan Audio Launch

இயக்குனர் பிரபு சாலமன், மாரிமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஏபிஜி ஏழுமலை. இவர் தற்போது அகவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரூபாய் படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்த கிஷோர் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக மாறியுள்ளார். சிரா ஸ்ரீ அஞ்சன் மற்றும் நித்யா ஷெட்டி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இவர் அடிப்படையில் தீவிரமான ரஜினி ரசிகர். அதனால் தான்நேற்று நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் சிஷ்யராக கருதப்படும் ராகவா லாரன்ஸ் மற்றும் ரஜினியின் நீண்டநான் நண்பரான சின்னிஜெயந்த் ஆகியோரை இந்த விழாவிற்கு அழைத்து இருந்தார்

இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குனருமான ரவிமரியா தமிழ் நடிகர்கள் பற்றி முன்பு ஒருமுறை இயக்குனர் மிஷ்கின் சற்று மட்டமாக பேசியதை சுட்டிக்காட்டி வருத்தப்பட்டார்.. தமிழ் நடிகர்களுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது, ஒரு மொழி, கலாச்சாரம் இருக்கிறது. அதன்படி தான் அவர்கள் நடிக்கமுடியும்.. இதை மற்ற மொழி கலைஞர்களுடன் ஒப்பிட வேண்டாம் என்று சற்று காட்டமாகவே கூறினார் ரவிமரியா.