சூர்யா-கே.வி.ஆனந்த் ஹாட்ரிக் கூட்டணி..!

surya 37 combo

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 36வது படமாகும். இதை தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்தை இயக்குகிறார் கேவி.ஆனந்த். அயன், மாற்றான் என இரண்டு ஹிட்டுகளுக்கு பிறகு இந்த இருவரும் மூன்றாவதாக இணையும் படம் இது.

இவர்கள் இருவர் மட்டுமல்ல, இவர்களது ஆஸ்தான நண்பரான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் இந்த ஹாட்ரிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. கேவ்மிக் யு ஆரி இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.