அஞ்சாவது படத்தில் அஞ்சானுடன் இணையும் ஹரி..!

ஒரு படம் ரிலீஸாகி இரண்டு வாரம் ஓடிவிட்டாலே மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டதாக பேசிக்கொள்ளும் இந்த அசாதாரணமான சூழலில் ஹரி டைரக்‌ஷனில் வெளியாகும் படங்கள் திருட்டு வி.சி.டி, இன்டெர்நெட் என சினிமாவை அழிக்க நினைக்கும் கொடிய அரக்கன்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு வெற்றிக்கொடி நாட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

ஒரு ரசிகனின் பல்ஸை சரியாக அறிந்திருக்கும் இயக்குனர் ஹரி, தனது ஒவ்வொரு படத்திலும் அதை சரியாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படங்கள் எல்லாமே வெற்றியை, சொல்லி அடிக்கின்றன.

இதுவரை சூர்யாவை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள ஹரி அடுத்ததாக ஐந்தாவது படத்திலும் அவருடன் கைகோர்க்க இருக்கிறார். இதற்காக சூர்யாவிடம் இரண்டு கதைகளையும் சொல்லியிருக்கிறாராம். அனேகமாக ‘பூஜை’ படம் ரிலீசான பிறகு விரைவில் இதற்கான அறிவிப்பும் வரலாம்..