மீண்டும் அதிரடி போலீஸ் கதையில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன்..!

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் பெண் வேடத்தில் நர்ஸாக நடித்துள்ளார் அல்லவா..? தான் நடித்த கேரக்டர்களிலேயே இதுதான் சவாலான கேரக்டர் என்று கூறு சிவகார்த்திகேயனுக்கு, இன்னும் ஒரு சவாலான கேரக்டரில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம்..

அது அதிரடியான போலீஸ் அதிகாரி கேரக்டராம். ‘காக்கிச்சட்டை’ படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடித்து விட்டீர்களே என கேட்டால், அது தன்னுடைய வயது, அந்த கதையின் தன்மைக்கு ஏற்ப அந்த போலீஸ் கேரக்டரில் கொஞ்சம் அடக்கி வாசித்தே நடிக்கவேண்டி இருந்ததால், அதில் முழு திருப்தி ஏற்படவில்லை என்பதால், அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கவேண்டும் என்பது இன்னும் கனவாகவே இருக்கிறதாம்..

இன்னும் மூன்று வருடங்கள் கழிந்த பின்னர், அதாவதும் இன்னும் சில கமர்ஷியல் ஆக்சன் படங்களை கொடுத்த பின்னர், கொஞ்சம் வயதும் அதிகரித்த பின்னர் பக்காவான போலீஸ் கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.. சமீபத்தில் கேரளா சென்றபோது அங்குள்ள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இந்த தகவலை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்..