14 வருடங்களுக்குபின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்..!

மணிரத்னம் இயக்கம் படங்களில் அவரது கண்களாக இருந்து செயல்பட்டவர் அவரது ஆஸ்தான கேமராமேன் பி.சி.ஸ்ரீராம். இவரது ஒளிப்பதிவுக்காகவே ரசிகர்கள் இவரை கொண்டாடினார்கள். மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (தெலுங்கு), திருடா திருடா, அலைபாயுதே என ஆறு படங்களில் இதுவரை இணைந்து பணியாற்றியுள்ளனர்.

கடைசியாக இவர்களது கூட்டணியில் உருவான அலைபாயுதே 2000ல் வெளியானது. அதன்பின் மணிரத்னத்தின் கூட்டணி சந்தோஷ் சிவன், ரவி கே.சந்திரன், ராஜீவ் மேனன் என மாறி மாறி இப்போது 14 வருடங்கள் கழித்து, தான் இயக்கவுள்ள புதிய படத்தில் மீண்டும் பி.சி.ஸ்ரீராமுடன் இணைந்துள்ளார்.

பி.சி.ஸ்ரீராம் இப்போது ஷங்கரின் ‘ஐ’ படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு பாலிவுட்டில் தனுஷ், அமிதாப் பச்சன் நடிப்பில் பால்கி டைரக்ஷனில் உருவாகிவரும் ‘ஷமிதாப்’ படத்த்ர்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அதை முடித்ததும் நேராக மணியின் படத்திற்கு வருகிறார். இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?