பிரபுதேவா படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்..!

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.. அடுத்தததாக சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கிய இவர் தற்போது பிரபுதேவாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார்.

கதாநாயகியாக ‘அநேகன்’ படத்தில் நடித்த அமிரா தஸ்தூர் நடிக்கிறார். பரதன் பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.