“படப்பிடிப்பை ஏன் 100 நாட்கள் நடத்துகின்றோம்”: ; சிவகார்த்திகேயன் ருசிகர தகவல்..!

athagapattathu magajanangaley trailer launch 1

தம்பிராமையா மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.. விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரும் பத்திரிக்கை மக்கள் தொடர்பாளருமான பி.டி.செல்வகுமார் வெளியிடுகிறார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.. தம்பிராமையாவின் மகன் என்பதால் வாழ்த்துவதற்காக பிரபலங்கள் குவிந்துவிட்டனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, கே.எஸ்.ரவிக்குமார், பிரபு சாலமன், எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், சுராஜ், பேரரசு, ‘ஈரம்’ அறிவழகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்..

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் பல விஷயங்களை சுவாரஸ்யமாக கூறினார்.. “கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது முத்து படத்தை எத்தனை நாட்களில் எடுத்தீர்கள் என கேட்டேன். நாற்பது நாள் என்று சொன்னார்.. அவ்ளோ பெரிய படத்தை நாற்பது நாளில் எடுத்துவிட்டீர்களா என ஷாக் ஆயிட்டேன்.. அப்பவெல்லாம் 25 நாட்கள்ல படம் எடுத்தாங்க நூறு நாட்கள் ஓடுச்சு.. இனிக்கு நூறு நாட்கள் படப்பிடிப்பு நடத்துறாங்க.. 25 நாள் ஓடினாலே பெரிய விஷயமா இருக்கு” என படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்துள்ளதையும் ஓடும் நாட்கள் குறைந்துள்ளதையும் கிண்டலடித்தார்.

தம்பிராமையாவின் மகன் உமாபதி முறைப்படி நடனம் கற்றுக்கொண்டவர் என்று சொன்னார்கள்.. ஆனால் இமான் இசையில் டபுள் ஓகே என்கிற பாடலில் அவர் ஆடியதை பார்க்கும்போது அவரது நடனத்தில் ஏதோ ஸ்பெஷலாக ஒன்று இருப்பது தெரிகிறது.. பாடலாசிரியர் யுகபாரதி மூலமாக இந்தப்படத்தின் கதை உமாபதியை தேடி வந்தது.. ஆனால் அதை இயக்குனர் பிரபு சாலமனிடம் சொல்லி, வரும் சில திருத்தங்கள் சொல்லி ஒகே சொன்னபின் தான் தன் மகனை படத்தில் நடிக்கவே சம்மதித்துள்ளார் தம்பிராமையா.