அடங்க மறு’ தமிழக வெளியீட்டு உரிமை கைமாறியது..!

adanga maru rights

பேராண்மை, நிமிர்ந்து நில் என கம்பீரமான டைட்டில்களை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அடங்க மறு’.. – ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் இந்த ‘அடங்க மறு’ படமும் அந்த வகையிலான ஒரு படம் தான்.

அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் மூலம் இப்போது சினிமா வட்டாரத்தில் வர்த்தகர்களின் ஃபேவரைட் படமாக மாறியிருக்கிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V. சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை கைப்பற்றியுள்ளார்.