விஷாகாவுக்கும் இப்போ பேயாக புரமோஷன் கிடைச்சாச்சு…!

vishakha-singh
‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ புகழ் விஷாகா சிங், இப்போது தனது சினிமா கேரியரில் புதிய புரமோஷன் வாங்கிருக்கிறார்.. ஆம்.. ஹன்ஷிகா, த்ரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் வரிசையில் இவருக்கும் பேயாக புரமோஷன் கிடைத்திருக்கிறது.. ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் மூலம் இதை விஷாகாவுக்கு வழங்கியிருப்பவர் இயக்குனர் மணிசர்மா..

இந்தப்படத்திற்கு நீண்ட நாட்களாக பேயாக நடிக்க நாயகி தேடி, கடைசியில் வராது வந்த மாமணியாக கிடைத்தவர்தான் விஷாகா. மூணாறு மலைப்பகுதியில் கிட்டத்தட்ட 20 நாட்கள் இடைவிடாமல் இரவில் ஷூட்டிங் நடத்தியுள்ளார்களாம்.. பாம்பு, பூச்சிகள் என எதற்கும் அசராமல் நடிப்பில் அசுர உழைப்பை தந்துள்ளாராம் விஷாகா. காமெடி, சென்டிமெண்ட் துளியும் இல்லாத அக்மார்க் ஹாரர் படம் இது என்கிறார் இயக்குனர் மணிசர்மா.