நடிகை சீதாவின் தந்தை காலமானார்


‘குரு சிஷ்யன்’, ‘ஆண் பாவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து 80-90களில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இன்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை பி.எஸ்.மோகன்பாபு. 76 வயதான அவர் சிலநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

இறந்த மோகன்பாபுவுக்கு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்பு இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.