அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகும் படங்கள் ; உற்சாகத்தில் சாயிஷா

sayyisha films

வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா சைகல்..பலவருடங்களுக்கு முன் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டி பறந்த நடிகர் திலீப்குமாரின் பேத்திதான் இவர்.. இந்தியில் ஒரு படத்தில் நடித்த கையோடு இரண்டாவது படத்தில் தமிழுக்கு வந்துவிட்ட இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அதில் விஜய்சேதுபதியுடன் நடித்துவரும் ஜூங்கா, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதில் இரண்டு படங்களின் இசைவெளியீட்டு விழாக்கள் சமீபத்தில் நடந்தன. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் சாயிஷா.