கறுப்பு வெள்ளை பெண்ணாக நயன்தாராவின் ஐரா..!

aira

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்களில் எல்லாம் கதையின் நாயகியாக, கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் முக்கியமாக அவர் தான் நடித்து வரும் ‘ஐரா’ படத்திற்கு கொடுத்து வரும் முக்கியத்துவம் ரொம்பவே சிறப்பானது என்கிறார்கள் படக்குழுவினர்.

கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிப்பில், இயக்குனர் கே.எம்.சர்ஜூன் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த இருக்கிறாராம்.. ஐரா (யானை) ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம்.. இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜேபி, மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்