பொதுவாக இசை சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் கதாநாயகிகள் பெரும்பாலும் பாடகிகளாகவே இருப்பதுதான் வழக்கம்.. ஆனால் ஒரு வித்தியாசமாக ‘அண்ணனுக்கு ஜே’ என்கிற படத்தில் நடிக்கும் மஹிமா நம்பியார், ஒரு இசைக்குழுவில் ட்ரம்பெட் வாசிப்பவராக நடித்திருக்கிறாராம்.. படத்தில் இவருக்கு ஜோடி அட்டகத்தி தினேஷ்..
ஆனால் இங்கேதான் ஒரு ட்விஸ்ட்.. இந்தப்படம் இசை சம்பந்தப்பட்ட படம் அல்லவாம்.. முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட படமாம். தினேஷ் அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் மஹிமாவின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.. அவர் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ‘குற்றம் 23’ படத்தைத்தான்.