மகளை புல்லட்டில் பள்ளிக்கு அழைத்துச்சென்ற ஜோதிகா..!

jyothika 1

‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்றும் இன்னும் மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்.. வரும் செப்-15ல் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்திற்காக புல்லட் ஓட்டி பழகி இருக்கிறார் ஜோதிகா. அந்த அனுபவம் குறித்து அவர் என்ன சொல்கிறார்..?

“நான் இந்தப்படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு உத்திரபிரதேஷ் மாநிலத்துக்கு இங்குள்ள ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவரோடு சென்றேன். அவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யா தான் எப்போதும் ஹீரோ…. நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன்” என மகளை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்துச்சென்ற கதையை கூறுகிறார் ஜோதிகா.