லட்சுமணின் சீடரை இயக்குனராக்கிய ஹன்ஷிகா..!

hansika-motwani 1

லட்சுமண் இயக்கத்தில் உருவான ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் யூ.ஆர்.ஜமீல். இந்தப்படங்களில் நாயகியாக நடித்த ஹன்சிகா, படப்பிடிப்பு தளத்தில் ஜமீல் செய்த வேலையால் ஈர்க்கப்பட்டார்.. விளைவு..?அவர் சொன்ன புதிய படத்தின் கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் ஹன்சிகா.

த்ரில்லர் படமாக உருவாக்க இருக்கும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.. “ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.. ஆனால் அதை பொய்யாக்கி விட்டார் ஜிப்ரான். கதாநாயகியை மையப்படுத்திய படம் என்றாலும் கமர்ஷியல் அம்சங்கள் எதற்குமே குறைவிருக்காது என்கிறார் இயக்குனர் ஜமீல்.