சரத்குமாரை 32 மணி நேரம் தூங்காமல் நடிக்க வைத்த நடிகை..!

 

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்துவரும் ‘சண்டமாருதம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மீராநந்தன் மற்றும் ஓவியா நடித்துள்ளார்கள். இவர்களில் நடித்தது போதுமடா சாமி என, சினிமாவை விட்டு விலகி சில மாதங்களுக்கு முன்பு மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராக சேர்ந்து விட்டார்.

அதனால்  ‘சண்டமாருதம்’ படப்பிடிப்புக்காக அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்கி கிளைமாக்சை முடித்திருக்கிறார்கள்..  அவர் அனுமதி வாங்கித் தந்த நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டுமானால் யாரும் தூங்க கூடாது. தூங்கவும் விடக்கூடாது என்று முடிவெடுத்து 32 மணிநேரம் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கினார்களாம்.

மற்றவர்களோடு சேந்து சரத்குமாரும் 32 மணிநேரம் தூங்காமல் ஓய்வே எடுக்காமல் நடித்துக் கொடுத்தார் என்றால் அதற்கு காரணமே மீராநந்தன் தான். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு தயாரிப்பாளர்கள் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் உட்பட எல்லோரும் மீரா நந்தனை பாராட்டி மலர் கொத்து கொடுத்து அனுப்பி வைத்தார்களாம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.