துப்பறியும் டாக்டராக அமலாபால்

amalapaul

அமலாபால் நடித்து வரும் படங்களின் போஸ்டர்கள் எல்லாமே பரபரப்பை கிளப்பி வருகின்றன அந்த லிஸ்டில் இப்போது அவரது புதிய படமும் இணைந்துள்ளது.. இந்த படம் இந்தியாவில் முதல் முயற்சியும் கூட. மலையாள திரையுலகை சேர்ந்த அபிலாஷ் பிள்ளை கதை எழுத அனூப் பணிக்கர் என்பவர் இயக்கும் புதிய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலாபால் நடிக்கிறார்.

இந்திய சினிமாவில் ஒரு நாயகி கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் படம் இதுதான். ஒரு மர்மமான வழக்கைத் தீர்க்க அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகள் தான் இந்த படத்தின் கதை அதுமட்டுமல்ல இந்த படம் கேரளாவின் முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் உமாதத்தன் அவர்கள் கையாண்ட உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

இதற்காக அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை இருவரும் டாக்டருடன் ஆறு மாதங்கள் கலந்துரையாடி இந்த கதையை எழுதி இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 2019 துவங்கி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படமாக்Aகப்பட இருக்கிறது