பொன்முட்டையிடும் வாத்தாக மாறிய காக்கா முட்டை நாயகி

aiswarya rajesh

காக்கா முட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பொன் முட்டையிடும் வாத்தாக மாறிவிட்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ள ஐஸ்வர்யா, மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி தனுஷின் வடசென்னை படத்தில் இவர் தான் கதாநாயகி. தற்போது துருவ நட்சத்திரம் படத்தை தொடர்ந்து சாமி ஸ்கொயர் படத்திலும் விக்ரமின் ஜோடியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சாமி படத்தில் மாமியாக நடித்த திரிஷாவின் கேரக்டரை இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே தெரிகிறது. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் கானா படத்திலும் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.